யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்!
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் காவல்துறையினரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பில் இருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.