இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட வேண்டும்! -பத்மநாதன் சத்தியலிங்கம்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட வேண்டுமென இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான குழுநிலை விவாதம் நான்காவது நாளாக இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சிறிய அளவில் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு மானிய அடிப்படையில் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.