கோப் குழுவிலிருந்து விலகும் டிலான் உட்பட மேலும் சிலர்!
கோப் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆளும் தரப்பின் உறுப்பினர் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது, ஆகவே கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சபாநாயகருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கோபா குழுவின் தலைவராக ஆளும் தரப்பின் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவரும் குழுவின் செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுக்கிறார்.
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு (கோப்) எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தார்கள்.இருப்பினும் நீங்கள் சாதகமான தீர்மானத்தை பெற்றுக்கொடுக்கவில்லை.
இவ்வாறான பின்னணியில் கோப் குழுவின் தலைவராக ஆளும் தரப்பின் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்துக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது.ஆகவே இவரது முரண்பாடான செயற்பாடுகளை கருத்திற் கொண்டு கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்
கோப் குழுவின் தலைவராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து,அக்குழுவின் உறுப்பினர்களான அனுர குமார திஸாநாயக்க,டிலான் பெரேரா, துமிந்த திஸாநாயக்க,தயாசிறி ஜயசேகர,எரான்விக்கிரமரத்ன,எஸ்.எம்.மரிக்கார்,ஹேஷா விதானகே,சாணக்கியன் இராசமாணிக்கம்,சரித ஹேரத் ,காமினி வலேகொட ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.