ஏ - 9 வீதியின் குறுக்காக சரிந்து வீழ்ந்த எரிபொருள் பவுசர் 

ஏ - 9 வீதியின் குறுக்காக சரிந்து வீழ்ந்த எரிபொருள் பவுசர் 

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் ஏ-9 வீதியில் டிப்பரும் எரிபொருள் பவுசரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (22) அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன.

விபத்து காரணமாக எரிபொருள் பவுசரில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் சிந்திக் காணப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.