ஜப்பான் நிதியமைச்சர் நாட்டிற்கு விஜயம்!
ஜப்பானிய நிதியமைச்சர் Shunichi Suzuki இன்று (11) பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்.
இவர் 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜப்பானிய நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
ஜப்பான் நிதி அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் நாடாளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு பயணிக்கவுள்ளதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.