இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் கௌசல்யா நவரத்ன!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவராக கௌசல்யா நவரத்ன போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2024 முதல் 2025 ஆம் ஆண்டு வரை தலைவராக அவர் போட்டியின்றி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக சதுர கல்ஹேனவும் தெரிவு செய்யப்பட்டார்.
எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 50 ஆவது பட்டமளிப்பு விழாவில் இவர்கள் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பெறுப்பேற்கவுள்ளனர்.