ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் - அமைச்சர் விஜயதாச!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வழக்கு நடவடிக்கைகள் சிலவற்றின் தீர்வுகள் கிடைத்த பின்னர் உரிய தீர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில் கருத்து வௌியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக கூறப்படும் கருத்தை மறுத்ததுடன், அரசாங்கத்தின் ஹம்பாந்தொட்டை கூட்டங்களில் பங்கேற்றதாக கூறப்படும் கருத்து பொய்யானது என்றார்.
தமது கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களும், அவர்களை பின்தொடர்ந்து சென்ற சிலரும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு இவ்வாறு அவப் பெயரை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
சுதந்திர கட்சி பிளவுபடவில்லை என்றும் இரண்டு மூன்று பேர் கட்சியை விட்டு விலகிச் சென்று அரசாங்கத்தின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவ்வாறு பிரிந்து செல்பவர்கள் அவப்பெயரை ஏற்படுத்துவதுடன் அவர்கள் பின்னர் போக்கிடம் இன்றி இருப்பதாகவும் மைத்ரிபால சிறிசேன குற்றம்சுமத்தினார்.
அத்துடன் தமது கட்சி சார்பில் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை முன்நிறுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
உடனே அருகில் இருந்த உறுப்பினர் ஒருவர், அந்த வேட்பாளர் அருகிலேயே இருப்பதாக ரகசியமாக கூறுகிறார் - அதற்குள் அவரை கடிந்து கொண்ட மைத்ரி, அந்த விடயத்தை பகிரங்கமாக கூற வேண்டாம் என்று கண்டிக்கிறார்.