தெளிவான வானில் சுப்பர் ப்ளு மூன் (நீல நிலவை) காணலாம்!
சுப்பர் ப்ளு மூன் (நீல நிலவு) அரிய நிகழ்வு இன்றிரவு வானில் நிகழவுள்ளதாகவும், இதனை பொதுமக்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என விண்வெளி ஆய்வாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஒரே மாதத்தில் 2 முறை பௌர்ணமி தினம் வரும் போது, இரண்டாவதாக வரும் முழு நிலவு “சுப்பர் ப்ளு மூன்” என அழைக்கப்படுகிறது.
2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் இந்த நிகழ்வு இன்று வானில் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில இடங்களில் காணக்கூடிய வாய்ப்பு குறைவாக உள்ளதாவும் விண்வெளி ஆய்வாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2018 ஆம் ஆண்டிலும், 2020 ஆம் ஆண்டிலும், ப்ளு மூன் தென்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.