வலுவான அமெரிக்க - இலங்கை கூட்டாண்மைக்கு அநுர இணக்கம்!
நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் அமெரிக்க தூதுவர் தெரிவித்த வாழ்த்துச் செய்திக்கு இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அநுரகுமார மேலும் தெரிவித்துள்ளதாவது,
“நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உங்கள் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததற்கு நன்றி. இலங்கைக்கு ஒளிமயமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளேன்.
மேலும் எமது இரு நாடுகளுக்கிடையில் வலுவான பங்காளித்துவத்தை மேம்படுத்துவதற்கு நான் எதிர்பார்த்துள்ளேன்.
ஒன்றாக, நமது மக்களுக்கு நன்மையளிக்கும் பொதுவான இலக்குகளை நோக்கி நாம் பணியாற்றலாம்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கான வாழ்த்துச்செய்தியில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
“ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்கா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அவர் பெற்ற வெற்றி குறித்து, இலங்கை மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்தியமைக்காக நாம் வாழ்த்துகின்றோம்.
வலுவான அமெரிக்க - இலங்கை கூட்டாண்மையை நாங்கள் மதிக்கிறோம். மற்றும் பகிரப்பட்ட முன்னுரிமைகளில் ஒன்றாகச் செயல்பட தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.