பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிப்பு!

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (29) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபராக 3 வருடங்கள் கடமையாற்றிய சி.டி.விக்ரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றதன் பின்னர் பொலிஸ் மா அதிபர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது.

இதனையடுத்து, புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில், 9 மாகாணங்களில் உள்ள சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் வழமையான செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் சென்றனர்.

இந்தநிலையில், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேஷபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் காலப்பகுதியில் நாட்டில் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒழிக்கும் வகையிலான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.

சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதன் ஊடாக மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.