பலாங்கொடை - கல்தொட்ட பகுதியில் மண் சரிவு - சாரதிகள் அவதானம்!

பலாங்கொடை மற்றும் கல்தொட்டைக்கு இடையிலான பிரதான வீதியில் பல இடங்களில் மண் மேடுகள்,  மின் கம்பம், கற்பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து வீழ்ந்தமையால் அந்த பகுதியில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

பலாங்கொடை மற்றும் கல்தொட்டைக்கு இடையிலான பிரதான வீதியில் பல இடங்களில் மண் மேடுகள்,  மின் கம்பம், கற்பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து வீழ்ந்தமையால் அந்த பகுதியில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அந்த வீதியின் ஊடான போக்குவரத்துகள் குறிப்பிடத்தக்க அளவே இடம்பெறுகின்றன.

குறித்த வீதியின் ஊாடக பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அல்லது மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.