யாழ் இந்து மயானத்தில் உள்ள எச்சங்கள் மனித எச்சங்களா?

யாழ் இந்து மயானத்தில் உள்ள எச்சங்கள் மனித எச்சங்களா?

யாழ்ப்பாணம்  செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ். நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா நேற்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா, நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் காவல்துறை அத்தியட்சகர், யாழ். தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பிரிவினர் , முறைப்பாட்டாளர் என பலரும் பார்வையிட்டுள்ளனர்

இந்த பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் காவல்துறை நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியிருந்தது.

இதன்பிரகாரம் இந்த இடத்தை பார்வையிட்ட யாழ்ப்பாண நீதவான், இந்த எச்சங்கள் மனித எச்சங்களா? என கண்டுபிடிப்பதற்கான விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், குறித்த பகுதியை ஸ்கான் செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் 2011ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் அமர்த்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.