ஐந்து மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை விடுப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 05 மாவட்டங்களின் 29 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, கம்பஹா , களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
நாட்டில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 36,552 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 17 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 15,120 ஆகுமெனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால், பொதுமக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.