பலாங்கொடை கல்வி சமூகத்தின் நாயகன் மக்களின் கண்ணீரோடு ஓய்வு பெற்றார்!

பலாங்கொடை கல்வி சமூகத்தின் நாயகன் மக்களின் கண்ணீரோடு ஓய்வு பெற்றார்!

சபரகமுவ மாகாணம் - இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை கல்வி சமுகத்திற்காக தன்னை அர்ப்பணித்து சேவை ஆற்றிய பலாங்கொடை சீ.சீ.தமிழ் மகாவித்தியாலய முதல்வர் பெருமாள் தம்பிராஜ் தனது 37 வருட அதிபர் சேவையில் இருந்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் கண்ணீரோடும் பாராட்டோடும் ஓய்வு பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவரின் பதவி காலத்தில் பலாங்கொடை கல்வி சமுகத்தில் பல மாற்றங்கள் மற்றும் பல சாதனைகளை படைத்து பலாங்கொடை மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.

இவரின் அதிபர் சேவையில் பலாங்கொடை சீ.சீ.தமிழ்‌ மகாவித்தியாலயம் கல்வி, விளையாட்டு மற்றும் ஒழுக்கம் என்பவற்றில் உச்சம் கண்டது.

விஞ்ஞானம், கணிதம், முகாமைத்துவம், பொறியியல், சங்கீத துறைகளில் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று சாதனை படைத்ததுள்ளனர்.

அத்தோடு பலாங்கொடை சீ.சீ.தமிழ் மகா வித்தியாலயத்தை மாவட்டம், மாகாணம், அகில இலங்கை, மற்றும் முழு உலகத்திற்கும் அறிமுகம் செய்த ஒரு சாதனையாளர்.

அத்தோடு சீ.சீ தமிழ் மகாவித்தியாலயத்தின் பெயரை உலக சாதனை புத்தகத்தில் பதித்தவர் அதிபர் பெருமாள் தம்பிராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.