மயிலத்தமடு மேய்ச்சற்தரை விவகாரம் - ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரும் முகமாக பாரிய ஆர்ப்பாட்டம்...!

மயிலத்தமடு மேய்ச்சற்தரை விவகாரத்தை முன்வைத்து மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் வருகையை இட்டு அவரின் கவனத்திற்கு கொண்டு வரும் முகமாக இந்த பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

இதனிடையே, கொம்மாதுறையில் ஆர்ப்பாட்ட களத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் வேண்டுகோள் ஒன்றை முன் வைத்தார்.

வீறு கொண்டு முன்னெடுக்கப்படும் போராட்டம் காரணமாக திருமலை வீதி முடக்கப்பட்டுள்ளது

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது வீதியில் அமர்ந்தவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக குறித்த வீதி போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மாற்று வழியில் போக்குவரத்துகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 போராட்டத்தை முடக்கும் வகையில் பாதுகாப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றதையும் காணக்கூடியதாக உள்ளது.

அதேவேளை, மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமன தேரர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பில் நேற்றைய தினம் போராட்டம் ஒன்றினை நடத்தினர்.  

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ள விருந்த நிலையில் இவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டதுக்ஷ

இதேவேளை, அம்பிட்டிய சுமன தேரர் கையில் தும்புத்தடிகளை வைத்து கொண்டு வீதியோரத்தில் அமர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான போராட்டம்

அதேசமயம், அம்பிட்டிய சுமன தேரருடன் இணைந்து பெரும்பான்மை இன மக்கள் சிலரும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தப்படும் மயிலத்தமடு பிரதேசத்தை விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்குமாறு கோரி அங்கு அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படும் சிங்கள மக்கள், மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டனர்.

ஜனாதிபதியின் விஜயம் இடம்பெறவுள்ள நிலையில் மேற்படி பயிர்செய்கையாளர்கள் உள்ளிட்ட குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிடும் முகமாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியே கேளுங்கள் சிங்களவர்களை துரத்துகின்றார்கள், சாணக்கியன் மற்றும் தொண்டமான் எமக்கு வேண்டாம், இனவாதம் தூண்ட வேண்டாம் என்ற கோஷங்களை எழுப்பியவாறு இவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.