Beauty Filters வசதிகள் நீக்கம் - சோகத்தில் இணையவாசிகள்!
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப்பில் Filter கள் நீக்கப்படும் மெட்டா அறிவிப்பு.

ஜனவரி 2025 முதல் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட அதன் தளங்களில் மூன்றாம் தரப்பு ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) வடிப்பான்கள் (Filters) இனி கிடைக்காது என்று மெட்டா அறிவித்துள்ளது.
மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மூலம் எடுக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படத்தினை பல்வேறு அழகுபடுத்தும் பில்டர்களுக்கு மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபில்டர் வசதிகள் நீக்கப்படும் பட்சத்தில் சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் அசௌகரியத்திற்கு உள்ளாவார்கள் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
மெட்டா ஸ்பார்க் ஸ்டுடியோ மூலம் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த வடிப்பான்கள் முக்கிய அம்சமாக மாறிவிட்டன.
பெரும்பாலும் பயனரின் தோற்றத்தை அழகுபடுத்தும் முறைமை மிகவும் வைரலானது.
சமூக வலைத்தளங்களில் வடிப்பான்களின் பயன்பாடு இளம் பெண்களுக்கு மோசமான மன ரீதியான ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்துவதாக மனநல நிபுணர்கள் மெட்டாவுக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.