பேருந்து கட்டணத்தைக் குறைக்க தீர்மானம்!
பேருந்து கட்டணத்தைக் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாயினால் குறைக்கப்பட்டதையடுத்து இத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய பேருந்து கட்டணங்கள் இன்றுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, எரிபொருள் விலை குறைந்ததால் பேருந்து கட்டணத்தை 4 வீதத்தால் குறைப்பதற்கு தமது சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 25 ரூபாயாக குறைக்க முடியும் என சங்கம் தெரிவித்துள்ளது.