அழகுக்கலை - கேக் அலங்கார போட்டியில் 60 மாணவர்களுக்கு சான்றிதழ்!
யும்னா ப்ரைடேல் அகாடமி ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் மணமகள் அலங்காரம், மஹிந்தி கலை, கேக் வடிவமைப்பு மற்றும் அலங்கார கண்காட்சியும், பாண்டசி மேக்கப் போட்டி நிகழ்ச்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
சீனியர் மேக்கப் ஆர்டிஸ் யும்னா ப்ரைடேல் அகாடமி டிரக்டர் சுமீரா பாஹீர் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக DR. MJ. அகாஸ் அஹமட் - அழகு கலை வைத்தியர், DR அணு குமரேசன் - அழகுக்கலை பயிற்சியாளர், Dr ஜெயபிரகாஷ் ஆகியோரும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் பங்கேற்றனர்
கண்காட்சியில் வெற்றி பெற்ற 60 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கமும் - கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கபட்டனர்.
சிறப்பு விருந்தினர்களுக்கான ஞாபக சின்னங்களும் வழங்கி கௌரவிப்பட்டது.