உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட ஆசை - சமல் ராஜபக்ஷ!

உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் விரும்பினால், இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் போட்டியிடுவேன் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று (09) தங்காலையிலுள்ள கார்ல்டன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார்.