125 மாவணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் பாடசாலை மாவணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
அருவி பெண்கள் வலையமைப்பின் அனைத்து பெண்கள் குழுக்களின் ஏற்பாட்டில் இன்று (04) திகதி மட்டக்களப்பில் உள்ள அருவி பெண்கள் வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வு குறித்த அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 125 மாணவர்களுக்கு இதன் போது கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள் உள்ளுட்ட மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டதுடன், அருவி பெண்கள் வலையமைப்பினால் தொடர்ச்சியாக பல்வேறு உதவித் திட்டங்களை பெற்று பயனடைந்து வரும் மாணவர்கள் அருவி பெண்கள் வலையமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரி ஜனன் அவர்களுக்கு ஆனந்த கண்ணீர் மல்க தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
குறித்த கற்றல் உபகரணங்களை நல்லுள்ளங் கொண்ட உபகாரிகள் பலர் அருவி பெண்கள் வலையமைப்பிற்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.