கிளிநொச்சியில் டிப்பர் வாகன சில்லில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளது.
தந்தை செலுத்திய டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி இவ்வாறு குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.