இலங்கையின் தென்கிழக்காக அந்தமான் கடல் பிராந்தியத்தில் நகரும் காற்று சுழற்சி!

இலங்கையின் தென்கிழக்காக ஒரு சிறிய காற்று சுழற்சியும்
அந்தமான் கடல் பிராந்தியம் பக்கமாக இன்னும் ஒரு காற்று சுழற்சியும் தற்போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நகர்கின்றன.
ஆனால் இவை கனத்த மழை வீழ்ச்சியை தருவதற்கான சாத்திய கூறுகள் மிக மிக குறைவாகவே உள்ளது.
எதிர்வரும் 05ஆம் திகதி அளவில் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு மாத்திரமே உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.