இலங்கையில் சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
அனுராதபுரத்தில் கடந்த இரண்டு நாட்களில் 5 சிறுமிகள் வன்புணர்வு மற்றும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.
30 மற்றும் 31ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
காலதீவுல்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 14 வயதுடைய சிறுமியுடன் காதல் உறவில் ஈடுபட்டு சிறுமியை ஏமாற்றி வன்புணர்வு செய்த 25 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவில்16 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் தந்தையின் 39 வயதுடைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பிரதேசத்தை விட்டு தப்பியோடிய 50 வயதுடைய கொத்தனார் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 17 வயது சிறுவன் பன்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 14 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, அப்பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் உட்பட மூவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் திறப்பன பிரதேசத்தில் 16 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 24 வயதான நீர் வழங்கல் சபையின் பொறியியலாளர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகங்களின் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.