காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் வாரத்தில் ஓரளவு மழைக்கான சாத்தியம்!

காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் வாரத்தில் ஓரளவு மழைக்கான சாத்தியம்!

இலங்கை வளிமண்டவியல் திணைக்களத்தின்  நேற்றைய அறிக்கையில் குறிப்பிட்டது போல் இன்று (21) முதல் பெரும்பாலும் சில நாட்களுக்கு சீரான காலநிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்து வருகின்ற மேலும் ஒரு காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மட்டக்களப்பு, பொத்துவில், திருகோணமலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு உள்ளது.

(இன்றுள்ள வானிலை அமைப்பின்படி  இவ்வாறு காணப்படுகின்றது.

அதேவேளை வானிலை அடிக்கடி அதிலும் முக்கியமாக இலங்கை வானிலை அடிக்கடி மாறக்கூடியது என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்). 

அதேநேரம் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் மழைக்கான சாத்திய கூறுகள் குறைவாகவே உள்ளன. 

ஏற்கனவே குறிப்பிட்டது போல் பொங்கல் தினத்தன்று Belal என்னும் சூறாவளி  Mauritius தீவுகளை தாக்கியது. 

அதுமட்டுமல்லாது அடுத்த வரும் தைப்பூச திருநாள் தினங்களாகிய 24, 25ஆம் திகதி அளவில் மீண்டும் ஒரு சூறாவளி Mauritius தீவை மற்றும் அதனை அண்டிய சில தீவுகளை தாக்கும் சந்தர்ப்பம் உள்ளது.