இலங்கையில் சுகாதார சேவைகள் முடங்கும் அபாயம்.!
அகில இலங்கை ரீதியாக பெப்ரவரி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
மருத்துவர்களுக்கு அரசாங்கத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க கோரி, அவர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்குபற்றிய விசேட கூட்டத்தில் இது குறித்து ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இதன்படி, சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பொது வைத்தியசாலைகளில் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை நடத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.