நாட்டில் 24 மணிநேரத்திற்குள் 148 பேருக்கு டெங்கு!

நாட்டில் 24 மணிநேரத்திற்குள் 148 பேருக்கு டெங்கு!

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்துள் 148 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த 9 நாட்களுக்குள் 1,050 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 33,795 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன்,இதுவரை அங்கு 13,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்கு டெங்குவால் பாதிக்கப்பட்ட 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.