சிறுவர்களுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் - உடன் வைத்தியசாலைக்கு செல்ல வலியுறுத்து!
புத்தாண்டு காலத்தில் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நல வைத்தியர் தீபால் பெரேரா (Deepal Perera) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நோய்த்தாக்கம் காரணமாக சிறுவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுகளை வழங்கும் போது அவதானமாக செயற்பட வேண்டும்.
அத்துடன், அவ்வாறான நோய்தொற்று காணப்படுமிடத்து அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.