பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு!

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
குறித்த அறிவுறுத்தல்களை புறக்கணிக்கும் பாடசாலை அதிகாரிகளிடம் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுமாறு கோரியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவுகிறது.
அதன்படி மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பமான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.