யாழ்ப்பாணத்தில் 11 வயது சிறுமி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.