நட்சத்திர ஹோட்டல்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் கடிதம்!

நட்சத்திர ஹோட்டல்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் கடிதம்!

நட்சத்திர ஹோட்டல்களுக்கு வாக்காளர்களை அழைத்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக வேட்பாளர்கள்  உபசரிப்புகளை  வழங்கினால் உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் ரத்து செய்யப்படும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க, வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக இவ்வாறான விடயங்களை செய்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் இல்லாதொழிக்கப்பட்ட சம்பவங்கள் வரலாறு நெடுகிலும் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறு வாக்காளர்களை மகிழ்விப்பது தேர்தல் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகவும், பணம் இல்லாத மற்ற வேட்பாளர்களுக்கு இழைக்கப்படும் கடுமையான அநீதி எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்காளர்களை மகிழ்விப்பதற்காக தேர்தல் வேட்பாளர்களுக்கு தங்களுடைய ஹோட்டல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு சமீபத்தில் பல முக்கிய ஹோட்டல்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அவற்றில் பெரும்பாலானவை கண்டியில் உள்ள ஹோட்டல்கள் என்பது குறிப்பிடத்தக்கது .