சாணக்கியனிடம் நட்டஈடு கேட்டு தன்கையால் 50000 செலுத்திய பிள்ளையான்!
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கல்கிசை நீதிமன்றில் மானநட்ட வழக்கொன்றை தாக்கல் செய்து தன்கையால் நட்டமடைந்துள்ளார்.
சாணக்கியனுக்கு எதிராக வழக்கை தாக்கல்செய்த பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறித்த வழக்கு அமர்விற்கு வருகை தராத நிலையில் நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பயண மற்றும் இதர செலவுகளுக்காக 50000 ரூபாயை நட்டஈடாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த விளக்கத்தை வழங்குகிறார் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
காணொளி மூலம் பெட்டி நாதம்..