வரித்திருத்தம் - அடுத்த வாரம் வெளியாகவுள்ள மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல்!

வரித்திருத்தம் - அடுத்த வாரம் வெளியாகவுள்ள மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல்!

பீடி இலைகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதை தடுக்கும் வகையில் தற்போதுள்ள வரி முறை திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக தற்போது பீடி உற்பத்தியின் போது அறவிடப்படும் இரண்டு ரூபாய் வரியே பீடி இலை இறக்குமதியின் போதும் அறவிடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பீடி இலை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரி கற்பனையான வரி எனவும் எதிர்பார்த்த வருமானம் 03 பில்லியன் ரூபா எனவும், ஆனால் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் குறைவான வருமானமே கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சந்தையில் கிடைக்கும் 90% பீடி இலைகள் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு வந்துள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த விலையில் பீடி இலை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதால், அதற்கான வர்த்தமானி அறிவித்தலுடன் வரி திருத்தம் செய்யப்பட்டு சந்தைக்கு விடுவிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.