மலையக ரயில் சேவைகள் பாதிப்பு - மண்மேடு சரிவு!
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடையில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் இன்று காலை முதல் மலையகத்திற்கான ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது, மண்மேட்டை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.