கொழும்பு – பதுளை வீதியில் மண் சரிவு - மாற்றுவீதிகளை பயன்படுத்தவும்!
கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஓப்பநாயக்க பகுதியில் மண்மேடு சரிந்துள்ளது.
இதன் காரணமாக ஓப்பநாயக்க – மாதொல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறித்த வீதியூடாக செல்லும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.