மீன்களின் மொத்த விலை 50 சதவீதத்தால் சரிவு!
இலங்கையில் மீன்களின் மொத்த விலை 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொடை மத்திய மீன் சந்தையின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மீன் கொள்வனவுக்கான கேள்வி குறைந்தமையால், விலை குறைந்ததாக அந்த சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்தார்.
பாறை, தலபத், ஷீலா உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகளின் விலை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மீனின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் கொள்வனவு குறைவடைந்துள்ளது.
இதனால், பாரியளவில் மீனின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொடை மத்திய மீன் சந்தையின் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.