அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு - குறைந்தது 22 பேர் பலி! (Video)

அமெரிக்காவின் மெய்ன் (Maine) மாநிலத்தின் லெவிஸ்டன் (Lewiston) நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர்.

சுமார் 60 பேர் காயமுற்றதாக NBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இரண்டு இடங்களில் நேற்றிரவு (25) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்தனர்

"அனைவரும் கதவைப் பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் இருங்கள். விசாரணை நடைபெறுகிறது," என்று மெய்ன் (Maine) மாநிலத்தின் பொலிஸ் நிலையம் 'X' தளத்தில் பதிவிட்டிருந்தது.

வட்டாரத் தலைமை அதிகாரியின் அலுவலகம் சந்தேக நபரின் இரு நிழற்படங்களை Facebookஇல் வெளியிட்டது.

சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு உதவுமாறு பொதுமக்களை பொலிஸ் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : Reuters