மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த உயர்தரப் பரீட்சார்த்திகள்!

2023 ஆம் ஆண்டுக்காக இடம்பெறவுள்ள கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் சிலர் இன்றைய தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த உயர்தரப் பரீட்சார்த்திகள்!

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போட்டு தங்களது கற்றல் நடவடிக்கைக்கு போதுமான காலத்தை பெற்றுதருமாறு கோரி அவர்கள் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 2023ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை, பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று அவர் ஆற்றிய உரையின் போதே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த பரீட்சையின் புதிய திகதி தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அடுத்த வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.