அலுவலக நேரத்தில் I-Phone பயன்பாட்டினை தவிர்க்க அறிவுறுத்தல்!
அனைத்து அரச ஊழியர்களும் தங்களது பணி நேரத்தின் போது I-Phone பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும் என சீனா அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.
அனைத்து அரச ஊழியர்களும் தங்களது பணி நேரத்தின் போது I-Phone பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும் என சீனா அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.
சீன அரசாங்கம் முன்னர் சில அரச நிறுவனங்களுக்கு மாத்திரம் இவ்வறிப்பினை விடுத்திருந்த நிலையில் தற்போது அனைத்து அரச ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இம்மாத இறுதியில் புதிய தொழிநுட்பத்திலான I-Phone ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.
அத்துடன், I-Phone பயன்பாட்டிற்கு மாத்திரமின்றி அரச அலுவலகங்களுக்குள் எடுத்து வருவதற்கும் அந்நாட்டு அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
சீன அரசாங்கத்தின் இந்த பணிப்புரைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத நிலையில் Apple நிறுவனமும் இதுவரை எவ்வித விமர்சனங்களையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.