சட்ட விரோதமான வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

சட்ட விரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

சட்ட விரோதமான வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!

சட்ட விரோதமான முறையில் தொழிலுக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சட்ட விரோதமாக தொழிலுக்கு செல்ல முயற்சி செய்த இரண்டாயிரத்து 500 பேர் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம், குறித்த எண்ணிக்கை ஆயிரத்து 900 ஆக காணப்பட்டது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், வெளிநாட்டு வேலைவாயப்பு மோசடிகளுடன் தொடர்புடைய நூறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொதுமுகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி செனரத் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, அனுமதிப் பத்திரமின்றி வெளிநாட்டுக்கு பணியாளர்களை அனுப்பியமை தொடர்பிலும், தனிநபராக அல்லது குழுவாக வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பிலும் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 100 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் தனிநபர்களாக குழுக்காளாக செயற்பட்ட 90 பேரும் அனுமதி பத்திரம் இன்றி வெளிநாட்டுக்கு பணியாளர்களை அனுப்புவதற்கு முற்பட்ட 9 நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி பத்திரத்தை பெற்று தவறாக செயற்பட்ட நிறுவனமொன்றின் உரிமையாளரும் அதில் அடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொதுமுகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.