மியன்மார் முகாம்களில் இலங்கை இளைஞர்கள் - மிருகத்தனமான தண்டனைகள்!

மியன்மார் முகாம்களில் இலங்கை இளைஞர்கள் - மிருகத்தனமான தண்டனைகள்!

மியன்மார் எல்லையில் தீவிரவாதக குழுக்களால் நடத்தப்படும் இணையக்குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கை இளைஞர்கள் தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்ப தொழில் வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்ட இந்த இளைஞர்கள் தற்போது சீன பாதாள உலக குழுக்கள் மற்றும் உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கட்டாய உழைப்பு, துஸ்பிரயோகம் மற்றும் உளவியல் பாதிப்பை  எதிர்கொள்வதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது

இந்தநிலையில் குறித்த இளைஞர்களின் பெற்றோர்கள் வெளிவிவகார அமைச்சுக்கு சென்று, தமது பிள்ளைகளின் விடுதலைக்காக உடனடியாக தலையிடுமாறு வலியுறுத்தினர்.

தமது குழந்தைகள் மனரீதியாக உடைந்துள்ளனர்.

அதிகரித்து வரும் சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நிலைமைகளுக்கு ஆளாகின்றனர். 

ஒரு தூதுக்குழுவை அனுப்பி அவர்களை நாட்டிற்கு அழைத்து வருமாறு தாம் அரசாங்கத்திடம் கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளனர்

இதேவேளை தூக்கமின்மை, மிருகத்தனமான தண்டனைகள் மற்றும் சிறிய விதி மீறல்களுக்கு கூட மின்சாரம் பாய்ச்சுதல் ஆகியவற்றுடன் தினமும் 18 மணிநேரம் வரை கட்டாய உழைப்பு போன்றவற்றில் குறித்த இலங்கையர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.