இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 868 பேர் கைது!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 868 பேர் கைது!

இலங்கையில் முன்னெடுக்கப்படும் யுக்திய விசேட சோதனை நடவடிக்கையில், இன்று அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 536 பேரும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 332 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 3 பேர் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.

கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 5 பேர் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அதேநேரம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 27 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்புகளின் போது, 120 கிராம் ஹெரோயின், 98 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 31,611 போதைமாத்திரைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.