பதுளையில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வு!

பதுளை மாவட்டத்தின் மகளிர் தின நிகழ்வுகள் ஊவா மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று (11) நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாவட்ட மகளிரணித் தலைவிகள்,தோட்ட தலைவிகள் பெண் பிரதிகள் உட்பட 500 யிற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து சிறப்பித்தனர்.