வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான காரணம் வெளியானது - நீதிமன்றம்!

சர்ச்சைக்குரிய வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகப்பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த சம்பவம் மூலம் குற்றச் செயல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக உறுதியாவதாக நீதவான் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

வர்த்தகர் தினேஸ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய வைத்திய நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு அமைய மேலதிக நீதவான் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மரணம் தொடர்பாக ஆராய்வதற்காக  நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய நிபுணர் குழுவின் பெரும்பான்மையான அங்கத்தவர்களின் நிலைப்பாடு இந்த தீர்ப்புக்காக கருத்திற் கொள்ளப்பட்டுள்ளதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக, வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் கடந்த மே மாதம் 8 ஆம் திகதி மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

பின்னர் அவரின் சடலம் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அங்கு இரண்டாவது பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.