சம்மாந்துறையில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

சம்மாந்துறையில் வயல் அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அங்கு நரிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு மல்கம்பிட்டி பகுதிகளிலேயே Sri Lankan Jackal எனப்படும் செம்பு நிறத்திலான நரிகளின் நடமாட்டம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நரிகள் அப்பகுதியில் விவசாயத்திற்கு சேதத்தை விளைவிக்கும் பிராணிகளை உட்கொள்வதால் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நன்மைகள் பயக்கின்றன என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் உயிரியல் விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், பிரிவுத் தலைவருமான ஏ.எம்.றியாஸ் அகமட் குறிப்பிட்டுள்ளார்.