யாழில் வீதி விபத்து: வேன் மோதி 9 மோட்டார் சைக்கிள்கள் சேதம்!

யாழில் வீதி விபத்து: வேன் மோதி 9 மோட்டார் சைக்கிள்கள் சேதம்!

யாழ்ப்பாணம் - ஆனைப்பந்தி சந்திக்கு அருகாமையிலுள்ள வாகன திருத்தகமொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது வேன் ஒன்று மோதியதில் 9 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன.

இந்த சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை வீதியூடாக பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு மோதியுள்ளதாகவும் வேனின் சாரதி தென்னிலங்கையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.