மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை, கந்தகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, உவபரணகம மற்றும் சொரேனாதோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பிரதேச செயலாளர் பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, மக்கள் மண்சரிவு, கற்பறைகள் உருண்டு விழதல், மரங்கள் சாய்ந்து விழுதல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.