வெளிநாட்டு நிறுவனங்களுக்கு CPC எரிபொருள் நிரப்பு நிலையங்களை மாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு CPC எரிபொருள் நிரப்பு நிலையங்களை மாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கான 3% கமிஷன் தொகையை குறைப்பது தொடர்பான மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க இன்று (03) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தரவுள்ளதாக சந்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், லங்கா ஐஓசி எரிபொருளின் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஆர்டர்களை வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

அதன் தலைவர் கோசல விதான ஆராச்சி கூறுகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செல்வாக்கு காரணமாக ஒரு ஆர்டருக்கு 35,000 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனிடையே, நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எரிபொருள் விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கத்திற்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என குற்றம் சுமத்தினார்

.