இலங்கை இராணுவத்தை பலப்படுத்த விரும்பும் ரணில்?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவத்தை பலப்படுத்தவும், பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கவும் விரும்புகிறார் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவத்தை பலப்படுத்தவும், பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கவும் விரும்புகிறார் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
இராணுவத் திட்டத்தின் பரந்தளவிலான எண்ணக்கருக்கள் ஏற்கனவே அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
சட்ட வரைவை உருவாக்க சட்ட வரைவாளர், அழைக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கான கூடுதல் செயல்பாடுகளாக பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து பணியாற்றுதல், ஆயுதப்படைகளுக்கு மூலோபாய வழிகாட்டுதலை வழங்குவதில் உதவுதல் உள்ளிட்ட எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு உத்திகளை வகுக்க வேண்டும் என்பனவும் அடங்குகின்றன.
அத்துடன், ஆயுதப் படைகளின் ஒருங்கிணைந்த கூட்டுப் பயிற்சிக்கான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் ஆயுதப் படைகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான கொள்கைகளை வகுத்தல் என்பனவும் குறித்த செயற்பாடுகளில் உள்வாங்கப்படவுள்ளன.
பாதுகாப்பு படைகளின் பிரதானி என்பது ஆயுதப்படைகளில் மிக முக்கியமான மற்றும் மிக உயர்ந்த நியமனமாகும்.
ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக இருக்கும் ஜனாதிபதி, இந்த பதவிக்காக இராணுவம், கடற்படை அல்லது விமானப்படை ஆகியவற்றில் ஒருவரை நியமிக்கும் அதிகாரத்தையும் பெற்றுள்ளார்.