5 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

5 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

கேகாலை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் 4 மணி வரையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சில பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுகின்றது. 

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.

மேற்கு, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல சந்தர்ப்பங்களில் மழைப் பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.