லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் குறைக்கப்படவில்லை!
லிட்ரோ சமையல் எரிவாயுக்கு நிகராக லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்படவில்லை என தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம்சுமத்தியுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுக்கு நிகராக லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்படவில்லை என தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம்சுமத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னணியின் தலைவர் பீ.கே. வனிகசிங்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
12.5 கிலோகிராம் நிறைவுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலனை விடவும், லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை, 708 ரூபாயினால் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு, 2 ஆயிரத்து 982 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 3 ஆயிரத்து 690 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த விலை முரண்பாடு நுகர்வோருக்கு பெறும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.